Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திராயன் 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (20:02 IST)
சந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ சற்றுமுன் வெளியிட்டது. இந்த புகைப்படம் வெளியான ஒருசில நிமிடங்களில் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது
 
இந்தியாவின் விண்வெளித்துறையில் ஒரு மைல்கல் என போற்றப்படும் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் முதல் முறையாக நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
 
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய சுமார் 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவியது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
இந்த நிலையில் சந்திரயான் 2 விண்கலம் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 2650 கிமீ தூரத்தில் சந்திரயான் 2 இந்த புகைப்படத்தை எடுத்திருப்பதாகவும், இந்த புகைப்படத்தில் மரே ஓரியண்டல் தளம் மற்றும் அப்போலோ எரிமலைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments