Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு.. கால அட்டவணை வெளியீடு.. முழு விவரங்கள் இதோ..!

Mahendran
வியாழன், 13 மார்ச் 2025 (10:10 IST)
பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்கான கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 
 
நாட்டின் முக்கிய பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு, ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வு வழியாக மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். ஒன்று முதன்மைத் தேர்வு இரண்டாவது பிரதானத் தேர்வு.
 
தேசிய தேர்வுகள் முகமை  ஆண்டுதோறும் ஜேஇஇ முதன்மைத் தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்துகிறது. 2025-26 கல்வியாண்டுக்கான முதல்கட்ட தேர்வு ஜனவரி 22 முதல் 30 வரை நடைபெற்றது. இதில் சுமார் 12.58 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11 அன்று வெளியிடப்பட்டன.
 
இந்நிலையில், 2-ம் கட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு பிப்ரவரி 1 அன்று தொடங்கி 26-ம் தேதி நிறைவு பெற்றது. தற்போது, இந்த தேர்வுக்கான விரிவான கால அட்டவணையை என்டிஏ வெளியிட்டுள்ளது.
 
மாணவர்கள் இந்த தேர்வு அட்டவணையை jeemain.nta.nic.in இணையதளத்தில் சென்று பார்க்கலாம். மேலும், ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை www.nta.ac.in வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொறியியல் படிப்புக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்..!

அரசு கட்டிடங்களுக்கு பசுஞ்சாணம் பூச வேண்டும்: உபி முதல்வர் யோகி வலியுறுத்தல்..!

இன்றும், நாளையும் வெளுக்கப் போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

மத மோதலை தூண்டுகிறாரா மதுரை ஆதீனம்? - மதுரை கமிஷனரிடம் புகார்!

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல: எடப்பாடி பழனிசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments