Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல் சபையை கலைக்க ஜெகன் மோகன் அரசு முடிவு??

Arun Prasath
வெள்ளி, 24 ஜனவரி 2020 (15:26 IST)
ஆந்திராவில் சட்ட மேல் சபை தேவையா? இல்லையா? என்பது குறித்து விவாதம் செய்ய சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் பதவிக்கு வந்ததிலிருந்து பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களுக்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து ஆந்திரா சட்ட சபையில் உள்ள மேல் சபை தேவையா? இல்லையா? என சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடத்த ஜெகன் மோகன் ரெட்டி முடிவெடுத்துள்ளார்.

இது குறித்து ஜெகன் மோகன் ரெட்டி, “மூன்று தலைநகர் மசோதா மற்றும் சி.ஆர்.டி.ஏ.வை ரத்து செய்வதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேற்றி மேல் சபைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதனை மேல்-சபைத் தலைவர் அரிப் நிபந்தனைகளை மீறி தேர்வு கமிட்டி பரீசீலனைக்கு பரிந்துரை செய்துள்ளார். பின்பு ஏழை குழந்தைகளும் ஆங்கில வழியில் கல்வி படிக்க வேண்டும் என்ற சட்ட மசோதா கொண்டு வந்தால் அதையும் தடுக்கிறார்கள்” என குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், “மேல் சபைக்காக ஒரு ஆண்டிற்கு 600 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால் மக்கள் நலத் திட்டங்களை தடுக்கிறது. ஏற்கனவே நிதி பற்றக்குறையால் தவிக்கும் மாநிலத்தில் இந்த சட்ட மேல் சபை தேவையா? என்பது குறித்து வருகிற 27 ஆம் தேதி விவாதம் செய்ய சிறப்பு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments