Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி பிராண்ட்பேன்ட் சேவை: செப் 19 முதல் ஆரம்பம் என அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (08:16 IST)
ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி அதிவேக இண்டர்நெட் பிராண்ட்பேன்ட் சேவை வரும் செப் 19 முதல் ஆரம்பம் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
 
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய ஜியோ 5ஜி சேவை பெருநகரங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ளது. வரும் டிசம்பருக்குள் இந்தியா முழுவதும் ஜியோ 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும்
 
மேலும் ஜியோ ஏர் ஃபைபர் திட்டத்திற்கான அறிமுக பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி பிராண்ட்பேன்ட் சேவை அடுத்த சில வருடங்களில் நாடு முழுவதும் சுமார் 200 மில்லியன் வீடுகளில் இணைக்கப்பட உள்ளது’ என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

திருந்துகிறதா பாகிஸ்தான்? இறந்த பயங்கரவாதிக்கு இறுதிச்சடங்கு செய்ய மதகுருக்கள் மறுப்பு..!

இந்து மதத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றுகிறேன்: சங்கராச்சாரியார் அறிவிப்பால் பரபரப்பு..!

மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி.. கவர்னர் பரிந்துரையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments