Publish Date: Sat, 29 Aug 2026 (11:54 IST)
Updated Date: Sat, 29 Aug 2026 (11:58 IST)
இந்தியாவின் முக்கிய பணக்காரர்களில் ஒருவர் அனில் அம்பானி. இவரின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் பல துறைகளிலும் முதலீடு செய்திருக்கிறது. இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும், மாநிலங்களில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் ரிலையன்ஸ் பல துறைகளில் வியாபாரம் செய்து வருகிறது. இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இந்நிறுவனம் வியாபாரம் செய்து வருகிறது.
ரிலையன்ஸ் நிறுவங்களில் ஒன்று JIO. இந்நிலையில், இந்த நிறுவனம் தற்போது IPO-வில் நுழையவிருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த JIP PLATFORMS நிறுவனம் சுமார் 37 ஆயிரம் கோடி மதிப்பிலான IPO-வை வெளியிட SEBI ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த IPO வெளியீட்டில் 27 கோடி பங்குகள் வெளியிடப்படவிருக்கிறது. இதற்கு முன்பு ஹூண்டாய் மோட்டார் இந்தியா ரூ.27,870 கோடி மதிப்புடைய பங்குகளை வெளியிட்டது. ஆனால், அதை விட அதிக மதிப்பிலான (37 ஆயிரம் கோடி) வெளியிட்டு மிகப்பெரிய IPO-வாக ஜியோ நிறுவனம் மாறவுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க