Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடையில் “சுச்சூ” போன சிறுவன், அந்தரங்கத்தில் சூடு வைத்த ஆசிரியர்! – கர்நாடகாவில் அதிர்ச்சி!

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (11:52 IST)
கர்நாடகாவில் கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்த சிறுவனுக்கு ஆசிரியர் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள துமகுருவில் அங்கன்வாடியில் 3 வயது சிறுவன் ஒருவன் படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் தினசரி அங்கன்வாடியில் அமர்ந்திருக்கும்போது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்துள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த அங்கன்வாடி ஆசிரியை அந்த சிறுவனை அடித்ததுடன், கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்ததற்காக சிறுவனின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments