Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பரின் மகளை கூட்டு பலாத்காரம் செய்த கஞ்சா கும்பல்! – கேரளாவில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (13:56 IST)
கேரளாவில் கஞ்சா வியாபாரியின் மகள் ஒருவரை அவரது கூட்டாளிகள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் திரிச்சூர் மாவட்டம் புன்னயூர்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சமீபத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் மாணவியின் தந்தையை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரை ஜாமீனில் விடுவிப்பது தொடர்பாக மாணவியின் தாயார் அடிக்கடி மலப்புரம் வரை சென்று வந்துள்ளார். அதனால் தனது கணவரின் கூட்டாளிகளிடம் தனது மகளை பார்த்துக் கொள்ளும்படி சொல்லியுள்ளார்.

மாணவியின் தாய் மலப்புரம் செல்லும்போதெல்லாம் அங்கு வந்த மாணவியின் தந்தையின் கூட்டாளிகள் மூன்று பேர் மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை யாரிடமும் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதோடு அடிக்கடி மாணவியை வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

ஒருநாள் மாணவி பள்ளியில் மிக சோர்வாக அமர்ந்திருப்பதை கண்டு அவரது ஆசிரியர் அவரை மருத்துவமனை அழைத்து சென்றபோது அவர் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மாணவியின் ஆசிரியை குழந்தைகள் நல ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மூவரில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்ற இருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்