Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 எம்.எல்.ஏக்கள் வாபஸ்: முதலமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா?

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (10:45 IST)
2 எம்.எல்.ஏக்கள் வாபஸ் குறித்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேட்டியளித்துள்ளார்.
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக அரசிற்கு கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 76 இடங்களையும், பாஜக 104 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி 38 இடங்களையும் கைப்பற்றியது. கடைசி நேரத்தில் காங்கிரஸ் ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்க முற்பட்டது. இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக்கொண்ட குமாரசாமி, முதல்வர் பதவிக்கு அடிபோட்டார்.
வேறு வழியே இன்றி ஜனதா தளத்தின் ஆர்டருக்கு அடிபணிந்த காங்கிரஸ், கர்நாடகத்தின் பாஜகவை கால் பதிக்க விடக்கூடாது என முடிவு செய்து, குமாரசாமியை முதல்வராக்க ஒப்புக்கொண்டது 
 
அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெறும் 38 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக குமாரசாமி பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற பின்னரும் காங்கிரஸ் - மஜத கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் விரைவில் அவர்களின் கூட்டணி பிரியும் எனவும், பாஜகவினர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவுக்கு தாவவிருப்பதாகவும் இதனால் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து என்றும் கூறப்பட்டது.
அதற்கேற்றாற் போல காங்கிரஸ் ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நாகேஷ், சங்கர்  இருவர் தாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று ஆளுனருக்கு கடிதம் எழுத்தியுள்ளனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி 2 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதால் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. எவ்வித பதற்றமும் இல்லாமல் இருக்கிறோம். எங்கள் அரசின் பலம் எனக்குத் தெரியும். காங்கிரஸுடன் நாங்கள் சுமூக உறவில் இருக்கிறோம். பாஜகவின் ஆசை ஒரு போதும் நிறைவேறாது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments