Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து யமுனையில் வீசிய காதலன்! உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

Advertiesment
கான்பூர்

Siva

, திங்கள், 22 செப்டம்பர் 2025 (07:51 IST)
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது 20 வயது காதலியை கொன்று, சடலத்தை சூட்கேசில் அடைத்து யமுனா ஆற்றில் வீசிய இளைஞரை, இரண்டு மாதங்களுக்கு பிறகு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கான்பூர், ஹனுமந்த் விஹாரில் வசித்து வந்த ஆகான்ஷா என்ற 20 வயது பெண், ஆகஸ்ட் 8 அன்று காணாமல் போனதாக அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆகான்ஷா, சமூக வலைத்தளம் மூலம் ஒரு இளைஞருடன் பழகி வந்ததாகவும், பின்னர் இருவரும் வாடகை வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் காவல் துறையினர் விசாரணையில் கண்டறிந்தனர்.
 
ஆரம்பத்தில், காவல் துறையினர் ஆகான்ஷா தனது காதலனுடன் ஓடிப் போயிருக்கலாம் என்று சந்தேகித்தனர். ஆனால், விசாரணையின்போது, ஆகான்ஷாவின் காதலனின் நடத்தை சந்தேகத்திற்கிடமாக இருந்தது. காவல் துறையினரின் தீவிர விசாரணையில், ஆகான்ஷா தனக்கு ஏற்கனவே வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருந்ததாகவும், இது ஆகான்ஷாவுக்கு தெரிந்ததும் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்ததாகவும் ஒப்புக்கொண்டான்.
 
சம்பவம் நடந்த அன்று, உணவகத்தில் தொடங்கிய வாக்குவாதம், வீட்டிலும் தொடர்ந்தது. ஆத்திரமடைந்த அவன், ஆகான்ஷாவை அடித்து, பின்னர் கழுத்தை நெரித்து கொன்றான். அதன்பிறகு, நண்பனுடன் சேர்ந்து ஆகான்ஷாவின் உடலை ஒரு சூட்கேசில் வைத்து, இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று யமுனா ஆற்றில் உடலை வீசியுள்ளனர்.
 
காவல் துறையினர், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி என விஜய் சொன்னது உண்மைதான்: ராஜேந்திர பாலாஜி..