Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவர்! மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (14:07 IST)
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது

நாடு முழுவதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று காலை 10 மணி முதலாக வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது.

மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகாஜூன கார்கே, அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1072 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். 416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த காங்கிரஸ் தலைவராக பதவியேற்க உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக நேரு குடும்பத்தை சாராத ஒருவர் பொறுப்பு ஏற்பது இதுவே முதல்முறை. பலரும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments