Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையத்திடம் கைகூப்பி கேட்கிறேன்: மம்தா பானர்ஜி உருக்கம்

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (07:29 IST)
மீதமிருக்கும் மூன்று கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்துங்கள் என தேர்தல் ஆணையத்தை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உருக்கமாக கோரிக்கை ஒன்றை அளித்துள்ளார்
 
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது இதில் ஐந்து கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்னும் மூன்று கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. கடைசி கட்ட தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மீதமிருக்கும் மூன்று கட்ட தேர்தலை ஒரே நாளில் நடத்துங்கள் என கைகூப்பி தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன் என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரே நாளில் தேர்தலை வைக்க வேண்டும் என்றும் மக்களைப் பாதுகாக்க இது ஒன்றுதான் வழி என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் தேர்தல் ஆணையம் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்ததாகவும், திட்டமிட்டபடி தான் தேர்தலை நடத்துவோம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments