Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை விட கொடுமையானது அம்பான் புயல்: முதல்வர் மம்தா பானர்ஜி

Webdunia
வியாழன், 21 மே 2020 (07:01 IST)
கொரோனாவை விட கொடுமையானது அம்பான் புயல்
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அழிவுவை விட அம்பான் புயல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் 
 
வங்கக்கடலில் உருவாகிய அம்பான் புயல் நேற்று மதியம் மேற்கு வங்க மாநிலத்திற்கும் மற்றும் வங்கதேச நாட்டிற்கும் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 முதல் 180 கிலோ மீட்டர் வரை காற்று வீசியதால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன
 
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: மேற்கு வங்கத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் புயலுக்கு 10 முதல் 12 பேர் வரை பலியாகி உள்ளதாகவும், குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கோல்கட்டா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயலா மிக அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் மேற்குவங்க மாநிலத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புயல் சேத மதிப்புகளை கணக்கிடவே 3 முதல் 4 நாட்கள் ஆகலாம் என்றும் கூறினார்
 
மேலும் இந்த புயலால் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாகவும், ஏராளமான வீடுகள் பள்ளி கட்டடங்கள் தொழிற்சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் புயல் பாதித்த பகுதிகளில் தற்போது மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments