Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.47 கோடி செலவு செய்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத மம்தா கட்சி!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (11:24 IST)
கோவா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் அந்த சட்டமன்ற தேர்தலுக்காக ரூபாய் 47 கோடி செலவு செய்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
கோவாமாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் செய்த செலவுகள் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் 20 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட பாஜக வெறும் 17.75 கோடி மட்டுமே செலவு செய்து உள்ளது
 
ஆனால் 47 கோடி ரூபாய் செலவு செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் அது மட்டுமின்றி ஒட்டு மொத்தமாக 50 ஆயிரம் வாக்குகளை மட்டுமே அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 3.5 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் காங்கிரஸ் கட்சி 11 கோடி ரூபாய் செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி இரண்டு இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்களிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தை தொடும் பூண்டு விலை! - மக்கள் அதிர்ச்சி!

போலீசாரிடம் பிடிபடாமல் இருக்கும் நடிகை கஸ்தூரி.. முன் ஜாமீனுக்கு முயற்சியா?

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்படுவாரா ஹசீனா? இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

இரண்டாவது மனைவியை 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்! - திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

இனி காத்திருக்க தேவையில்லை.. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சூப்பர் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments