Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது அணிக்கு திடீர் சிக்கல்: மம்தா பானர்ஜியின் அதிரடி முடிவு

Webdunia
ஞாயிறு, 11 மார்ச் 2018 (08:59 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியை கைப்பற்றவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஒரே பெரிய மாநிலம் கர்நாடகம் மட்டுமே. அதுவும் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் தாக்குப்பிடிக்குமா? என்பது சந்தேகமே

இதனால் வலுவான பாஜகவை தேசிய  அளவில் எதிர்க்க காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அமைக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்களும் கூறியதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் திடீரென, மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள 5 மாநிலங்களவை தொகுதிகளில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்விக்கு ஆதரவு அளிக்க மம்தா முடிவு செய்துள்ளதாகவும், இந்த ஆதரவு பாராளுமன்றத்திலும் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே திரிபுராவில் எங்களுடன் கூட்டணி வைக்காததால்தான் காங்கிரஸ் தோல்வி அடைந்தது என்று மம்தா கூறியிருந்த நிலையில் தற்போது அவர் காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்துள்ளதால் மூன்றாவது அணி ஆரம்பகட்டத்திலேயே சிக்கலை சந்தித்துள்ளது. மம்தா இல்லாத 3வது அணி தேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments