Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் தாயாரை அவதூறாக பேசிய நபர் கைது.. ராகுல் காந்தி கண்டனம்..!

Advertiesment
Darbhanga

Mahendran

, வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (11:52 IST)
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக பீகாரின் முகமது ரிஸ்வி என்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
சமீபத்தில், பீகாரில் ராகுல் காந்தியின் யாத்திரையின் போது, காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் மேடையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது மறைந்த தாயாரையும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 
 
பாட்னாவில் உள்ள கோத்வாலி காவல் நிலையத்தில் பாஜகவினர் இது தொடர்பாக புகார் செய்து, ராகுல் காந்தி இந்த விவகாரத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பாஜக மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்தி மற்றும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை எக்ஸ் தளத்தில் வன்மையாக கண்டித்துள்ளார். ராகுல் காந்தி தனது கண்டனத்தில் பிரதமருக்கு மட்டுமின்றி, இந்திய கலாச்சாரம் மற்றும் விழுமியங்களுக்கும் இது ஒரு "வெட்கக்கேடான" மற்றும் "ஆழமான அவமானம்" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொந்த பேரனையே தலையை துண்டித்து பலிக் கொடுத்த தாத்தா! - லியோ பட பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!