Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல்லாத நாடுகளின் பெயரில் போலி தூதரகம்.. ஒருவர் கைது. ரூ.44 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!

Mahendran
வியாழன், 24 ஜூலை 2025 (11:06 IST)
டெல்லியில் உலகில் இல்லாத நாடுகளின் பெயரில் போலியான தூதரகத்தை நடத்தி வந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்கு ஆர்டிக்கா, சபோர்கா, பெளல்வியா, லோடோனியா போன்ற உலகில் இல்லாத நாடுகளின் பெயர்களைக் கூறி, ஒரு வாடகை வீட்டில் போலியான தூதரகத்தை நடத்தி வந்த ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி, பண மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் போன்ற செயல்களில் இவர் ஈடுபட்டு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
போலி தூதரகத்தில் இருந்து ரூபாய் 44 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், கார்கள், போலியான பாஸ்போர்ட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இவர்  பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக போலியாக புகைப்படங்களை செட்டப் செய்துள்ளார் என்றும், ஏற்கனவே சட்டவிரோத செயற்கைக்கோள் தொலைபேசியை பயன்படுத்தியதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. 
 
இந்த சம்பவம் டெல்லி காவல்துறையினர் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊடுருவல்காரர்களுக்கு எப்படி வாக்களிக்கும் உரிமை வழங்க முடியும்?" ராகுல் காந்திக்கு அமித் ஷா கேள்வி

தாய்லாந்து ராணுவத் தாக்குதல்: கம்போடியாவில் புத்தமத துறவிகள் உள்பட 29 பேர் காயம்

வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

சாராயம் விற்ற பணத்தில் தான் முப்பெரும் விழா நடைபெற்றது.. திமுக குறித்த அண்ணாமலை விமர்சனம்..!

விஜய் கூட்டத்தில் பொது சொத்து சேதப்படுத்தப்பட்டால் நீதிமன்றம் தலையிடும்.. தவெகவுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments