Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தற்கொலை – டெல்லியில் நடந்த சோகம் !

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (16:12 IST)
ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகமெங்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் பலி ஆனவர்களின் எண்ணிக்கை 8000 ஐ தாண்டியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சோதனைக்கு பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா  திரும்பிய பஞ்சாபை சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு யாரும் எதிர்பாராத விதமாக அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சம்மந்தமாக டெல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments