பாஜக 7 வருடமாக ஆட்சியில் உள்ளபோதும் தொடர்ந்து நேருவை குற்றம் சொல்லி வருவதாக மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி பல இடங்களுக்கும் பயணித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நாட்டில் நடைபெறும் பல பிரச்சினைகளுக்கு பிரதமர் மோடி இந்தியாவின் முதல் பிரதமரான நேருவை கைகாட்டி வருவது காங்கிரஸாருக்கு கோபத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் “கடந்த 7ஆண்டுகளாக பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளது. ஆனாலும் இன்னமும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நேருவையே குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசுக்கு பொருளாதாரக் கொள்கை குறித்து எந்த புரிதலும் இல்லை. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழையாகவும் மாறிக் கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.