ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் அதிகமாக உள்ள நிலையில், அவர்களது தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்களால் மாநிலங்களின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவோயிஸ்டுகளை சரணடைய செய்யவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பல மாவோயிஸ்டுகள் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளனர்.
அதேசமயம் சரணடையாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நான்கு மாவட்ட ரிசர்வ்டு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சமீபமாக சத்தீஸ்கர் மாநிலம் பிஜபூர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளுடனான மோதல் தொடர்ந்து வருகிறது.
அபூஜ்மாத் பகுதியில் உள்ள காட்டில் மாவோயிஸ்ட் - ரிசர்வ்டு போலீஸ் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 26க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் நக்சல்கள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் பல பகுதிகளில் குண்டு வெடிப்பு தாக்குதல் உள்ளிட்டவற்றில் மூளையாக செயல்பட்டு பல சேதங்களை விளைவித்த பசவராஜூவை பிடிக்க ரூ.1.5 கோடி சன்மானமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Edit by Prasanth.K