Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறை பிடித்த வீரரின் புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்டுகள்! – சத்தீஸ்கரில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (18:52 IST)
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரரை சிறை பிடித்த மாவோயிஸ்டுகள் அவரின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் – பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சில வீரர்கள் மாயமான நிலையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை சிறை பிடித்து வைத்திருப்பதாக மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்முவை சேர்ந்த ராகேஸ்வர் சிங் என்ற அந்த வீரரை மீட்டு தரும்படி அவரது மனைவி பிரதமர், குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் ராகேஸ்வர் சிங் மாவோயிஸ்ட் கேம்ப்பில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள மாவோயிஸ்டுகள் தங்களுக்கு காவல் துறையுடனோ, பாதுகாப்பு படையுடனோ விரோதம் இல்லை என்றும், ராகெஸ்வர் சிங் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராகேஸ்வர் சிங்கை விடுதலை செய்ய வேண்டுமென்றால் தங்களுடம் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு ஒரு குழுவை தயார் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் சத்தீஸ்கரில் பரபரப்பு நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments