இந்தியாவில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ நேரத்தில் கட்டாயமாக கொரோனா சோதனை செய்ய வேண்டும் என மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளது. இதுவரை 652 பேர் பலியாகியுள்ள நிலையில் 3960 பேர் வரை குணமாகியுள்ளனர். இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் கொரோனா சோதனைகள் இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன. இதையடுத்து இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.