Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களுக்கு நிகராக பெண்களின் திருமண வயது 21 ஆக உயருகிறது!!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (12:26 IST)
பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக அதிகரிப்பதற்கான மசோதவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

 
இந்தியாவில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆராய மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குழு தற்போது அறிக்கையை சம்ர்பித்தது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது விரைவில் சட்டமாக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்களின் திருமண வயது 21 ஆக உள்ள நிலையில், அதற்கு இணையாக பெண்களின் திருமண வயதும் உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்