கம்யூனிஸ்டுகளை உலகமே நிராகரித்துவிட்ட நிலையில் கேரள மக்களும் நிராகரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கேரளா அரசியலில் எதிரெதிராக இருந்த போதும் திரிபுராவில் இரண்டு கட்சிகளும் தேர்தலில் இணைந்து கூட்டாக போட்டியிட்டதாக விமர்சனம் செய்தார்.
கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பாதுகாப்பாக இருப்பதாகவும் அதே நேரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டிய தீவிரவாதம் தலைவிரித்தாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்கு அரசியலுக்காக காங்கிரஸ் மௌனமாக இருந்ததாகவும் கம்யூனிஸ்டுகளை உலகமே நிராகரித்துவிட்ட நிலையில் கேரளாவும் நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.