Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

Advertiesment
Operation Sindoor bollywod

Prasanth Karthick

, சனி, 10 மே 2025 (11:11 IST)

இந்தியா - பாகிஸ்தான் மோதல் ஒரு பக்கம் இருக்க, ஆபரேஷன் சிந்தூர் பெயரிலான பட டைட்டிலுக்கு பாலிவுட் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள போட்டிதான் தற்போது வைரலாகியுள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில், பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தியது. இதில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 

போர் சார்ந்த வரலாற்றுப் படங்கள் பாலிவுட் பக்கத்தில் நல்ல வரவேற்புடன் ஹிட் அடிப்பது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்தியா நடத்திய போர்கள் குறித்து, போர் வீரர்களை பற்றி சுமார் 70க்கும் மேற்பட்ட படங்கள் பாலிவுட்டில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் மீது திரும்பியுள்ளது பாலிவுட்டின் கவனம்.

 

படமெல்லாம் அப்புறம் எடுத்துக்கலாம், முதலில் டைட்டிலை பதிவு செய்து வைப்போம் என போட்டிப்போட்டுக் கொண்டு சிந்தூர் பெயரில் பல தலைப்புகளை பதிவு செய்து வருகிறார்களாம். மிஷன் சிந்தூர், ஹிந்துஸ்தான் கா சிந்தூர், மிஷன் ஆபரேஷன் சிந்தூர், சிந்தூர் கா கில்லாடி, சிந்தூர் கா ஹீரோ என எக்கச்சக்கமான தலைப்புகளை பதிவு செய்து வருகிறார்களாம். சுமார் 80க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், நிறுவனங்கள், நடிகர்கள் போட்டிப்போட்டு தலைப்புகளை பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுதர்சன சக்ராவை பாகிஸ்தான் அழித்ததா? இந்திய ராணுவம் விளக்கம்..!