”மேன் வெர்சஸ் வைல்டு” நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அதன் தொகுப்பாளரான பியர் கிரில்ஸுக்கு எவ்வாறு ஹிந்தி புரிந்தது என்று பரவலாக எழுந்த சந்தேகத்திற்கு, மோடி விளக்கமளித்துள்ளார்.
டிஸ்கவரி சேன்னலில் ஒளிபரப்பாகும் ”மேன் வெர்சஸ் வைல்டு” என்னும் சாகச நிகழ்ச்சியில், சமீபத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மோடி கலந்து கொண்ட அந்த தொடர் உலகளவில் அதிக பார்வையாளரைக் கவர்ந்தது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பியர் கிரில்ஸுடன் பிரதமர் மோடி ஹிந்தியிலேயே பேசினார். ஆங்கிலேயரான பியர் கிரில்ஸுக்கு மோடி பேசிய ஹிந்தி எப்படி புரிந்தது என அந்த நிகழ்ச்சியை பார்த்த பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் அந்த சந்தேகத்திற்கு ”மன் கீ பாத்” ரேடியோ நிகழ்ச்சியில் மோடி பதிலளித்துள்ளார். அதில் “பியர் கிரில்ஸுக்கு ஹிந்தி புரிந்ததில் எந்த ரகசியமும் இல்லை. பியர் கிரில்ஸ் வயர் இல்லாத சிறிய மொழிமாற்று கருவியினை காதில் பொருத்தி இருந்தார். நான் ஹிந்தியில் பேச, அந்த கருவி அதனை ஆங்கிலத்திற்கு மொழிமாற்றி கொடுக்கும்” என கூறியுள்ளார். தற்போது மோடி இது குறித்து பதிலளித்துள்ளது பலருடைய சந்தேகத்துக்கும் விடை கிடைத்துள்ளது.