Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரயான் 2 திட்டத்தால் நாடு ஒன்றுபட்டுள்ளது..மோடி புகழாரம்

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (08:56 IST)
இஸ்ரோவின் சந்திரயான் 2 திட்டத்தால் இந்தியாவே ஒன்றுபட்டுள்ளது என மோடி என மோடி புகழ்ந்துள்ளார்

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவிற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்த போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ தலைவர் சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், பிரதமர் மோடி, மட்டுமல்லாமல் இந்தியாவே சோகத்தில் மூழ்கியது. ஆனாலும் இஸ்ரோ முயற்சியை கைவிடவில்லை. இதனையடுத்து நேற்று விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க வேண்டிய இடத்திற்கு 500 மீ தொலைவில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அடுத்த மாதம் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அந்த மாநிலத்தின் ரோட்டக் நகரில் பிரதமர் மோடி பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், ”பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிய நிலையில், வளர்ச்சி, நம்பிக்கை, மற்றும் மிகப்பெரிய மாற்றங்களை தீர்க்கமாகவும், அர்ப்பணிப்போடும் செய்து வருகிறது.” என கூறினார்.

மேலும் அவர், ”இஸ்ரோ திட்டம் நாட்டை தட்டி எழுப்பியுள்ளது, சந்திரயான் 2 திட்டத்தால் இந்தியாவே ஒன்றுபட்டுள்ளது.” என புகழ்ந்து பேசினார். நாட்டில் நிலவிவரும் பொருளாதார சரிவு, மதவாத பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை குறித்து நடவடிக்கை எடுக்காமல் ராக்கெட் விடுவதில் என்ன நன்மை ஏற்படப்போகிறது என சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே பலர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். ஆனாலும் இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியில் இது ஒரு மைல் கல் என பலரும் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments