ஒடிசாவில் சேதாரங்களை ஏற்படுத்தியுள்ள யாஸ் புயல் குறித்து மோடி அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக உருமாறிய நிலையில் நேற்று கரையை கடந்தது. அதிதீவிர புயலாக யாஸ் கரையை கடக்கும் நிலையில் மணிக்கு 155 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மேற்கு வங்கம் வழியாக ஓடிசாவில் கரையைக் கடந்தது. ஒடிசாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாதிப்பு பகுதிகளை மோடி இன்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார். மேலும் அம்மாநில முதல்வரான நவீன் பட்நாயக்குடன் பாதிப்பு குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். அடுத்த கட்டமாக முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.