Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமல் அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தாய் கைது

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (17:13 IST)
குழந்தை விடாமல் அழுததால், ஆத்திரமடைந்த தாய் அக்குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள  சூரத் வேத் சாலையில்  இருக்கும் படக்வாடியைச் சேர்ந்தவர் அப்துல்(40). இவரது மனைவி பில்கிஸ் கமானி(35) இத்தம்பதியர்க்கு  வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

அச்சிறுமி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த தாய் பில்கிஸ் மகளை ஓங்கி தரையில் அடித்து, தொடர்ந்து தாக்கியுள்ளார்.

அன்று மாலை பணிமுடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை அப்துல் வீட்டிற்கு வந்தபோது, சிறுமியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள்  சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியதைக் கேட்டு தந்தை அப்துல் அதிர்ச்சியடைந்தார்.

மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் உடலில் வெளிப்புற காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் பில்கிஸை கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments