விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த எம்.பி.
, சனி, 16 டிசம்பர் 2017 (12:17 IST)
விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை எதிர்க்கும் வகையில், நாடாளுமன்றத்திற்கு எம்.பி. ஒருவா் டிராக்டரில் வந்து அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளார்.
நாட்டிலேயே மிகவும் இளம் வயதில் மக்களவைத் தொகுதி எம்.பி.யான துஷ்யந்த் சௌதாலா, ஹரியானா மாநிலம். ஹிஸார் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பதவி வகிக்கிறார். விவசாயிகள் பாதிப்படையும் வகையில், வாகனச் சட்ட விதிகளில் மத்தய அரசு திருத்தம் மேற்கொண்டதை கண்டித்து, துஷ்யந்த் நேற்று நடந்த குளிர்கால கூட்டத் தொடருக்கு, டிராக்டரை ஓட்டி வந்தார். இது பலரது கவனத்தையும் ஈா்த்தது.
புதிய விதிகளின்படி டிராக்டா் விவசாய வாகனமாக கருதப்படாது என்பதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள், மேலும் டிராக்டரை பயன்படுத்துவதற்கு விவசாயிகள் வரி செலுத்தும் நிலை ஏற்படும். எனவே இதை கண்டிக்கும் வகையில் நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த எம்.பி யை பலர் பாராட்டி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்