Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய உச்சம் பெற்று மும்பை பங்குச்சந்தை சாதனை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:19 IST)
புதிய உச்சம் பெற்று மும்பை பங்குச்சந்தை சாதனை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது கொரோனா வைரஸ் உச்ச கட்டத்தில் இருந்த நிலையில் பங்குச்சந்தை மிக மோசமாக இறங்கியதும், லட்சகணக்கான கோடிகள் பங்குச் சந்தையில் நஷ்டம் அடைந்தால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடந்த சில வாரங்களாக பொருளாதாரம் மீண்டும் உச்சத்திற்கு சென்று வருவதை அடுத்து பங்குச் சந்தையும் உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் அவர்கள் வெற்றி பெற்றதன் தாக்கமும் பங்குசந்தைகள் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பங்கு சந்தை உச்சத்தில் இருந்து வரும் நிலையில் மும்பை பங்குச் சந்தையும் கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றத்தில் உள்ளது இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 523  புள்ளிகள் உயர்ந்து 44161 புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சம் பெற்று சாதனை படைத்தது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 94 புள்ளிகள் உயர்ந்து 12827 புள்ளிகளை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மும்பை பங்கு சந்தை புதிய உச்சம் பெற்றுள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments