Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓகி புயலால் நிலைகுலைந்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி நாளை குமரிக்கு வருகை

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (09:54 IST)
குமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக சேதமடைந்தது. மீனவ மக்கள் பலர் தங்களின்  வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து கடும் துயரத்திற்கு ஆளானார்கள்.

ஓகி புயலிற்கு முன் கடலிற்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், ஓகி புயலில் சிக்கி பலர் மாயமானார்கள். மத்திய மாநில அரசுகள், நடவடிக்கை எடுத்து காணாமல் போன மீனவர்கள் பலரை மீட்டனர். மீதமுள்ளவர்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு நடத்திய கணக்கெடுப்பில் 104 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 433 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசின் சார்பில் நிவாரணத் தொகையாக 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நாளை குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி ஓகி புயலால் பாதிப்படைந்த பகுதிகளை நேரில் பார்வையிட இருக்கிறார். மேலும் ‘ஒகி’ புயலால் இறந்த மீனவர்களின் குடும்பத்தினரையும், கடலில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறவிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments