சமீபத்தில் மத்திய அரசின் NCERT பாடத்திட்டத்தில் முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டது குறித்து நடிகர் மாதவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் NCERT பாடத்திட்டத்தில் 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் முகலாயர்கள் மற்றும் சுல்தான்கள் குறித்த பாடங்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக இந்திய ராஜ்ஜியங்களான மகதப் பேரரசு, குப்தர்கள், சாதவாகனர்கள் உள்ளிட்ட அரசுகளின் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழ் நிலத்தை ஆண்ட சோழர்கள், பாண்டியர்கள் குறித்தும் பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் NCERTன் இந்த நடவடிக்கை சர்ச்சைகளுக்கு உள்ளானது. இந்த சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பி பேசிய நடிகர் மாதவன் “நான் பள்ளியில் படித்தபோது பிரிட்டிஷ் ஆட்சி பற்றியும், சுதந்திர போராட்டத்தை பற்றியும் 4 பாடங்கள் இருந்தன. ஆனால் சோழர்கள், பாண்டியர்கள் உள்ளிட்ட சொந்த நில மன்னர்கள் குறித்து ஒரு பாடம்தான் இருந்தது.
800 வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்த பிரிட்டிஷார், முகலாயர்கள் பற்றி ஏராளமான பாடங்கள் இடம்பெற்றபோது, 2,400 ஆண்டுகளாக ஆட்சி செய்த நம் சோழர்கள், பாண்டியர்கள் குறித்து ஏன் பாடப்புத்தகத்தில் விரிவாக இடம்பெறவில்லை. அந்த பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Edit by Prasanth.K