நீட் தேர்வு முறைகேடு வழக்கு.! உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

Senthil Velan
வியாழன், 18 ஜூலை 2024 (08:18 IST)
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு சர்ச்சைக்குள்ளான நிலையில், இதுதொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
 
நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது மற்றும் தேர்வில் நேரமிழந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
 
மேலும் நீட் மறுதேர்வு நடத்த கோரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 30-க்கும் அதிகமான மனுக்கள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்து விசாரிக்குமாறு தேசிய தேர்வு முகமைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ALSO READ: அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா.! தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்..!!
 
இந்த மனுவை கடந்த 15 ஆம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இதற்கு ஒப்புதல் தெரிவித்ததுடன், இந்த மனுக்கள் மீது வரும் 18-ஆம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என தெரிவித்தது. அதன்படி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் கல்வி தேவையில்லை, வேலைகள் எல்லாம் 'அவுட்சோர்ஸ்' ஆகிவிட்டன!: முன்னாள் பாஜக எம்.பி. சர்ச்சை கருத்து..!

தீவிரவாதத்தை நிறுத்தவில்லை என்றால், வரைபடத்தில் காணாமல் போய்விடுவீர்கள்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

உ.பி. முதல்வர் யோகி குறித்து அவதூறு புகைப்படம் வெளியீடு: இளைஞர் கைது, சிறையில் அடைப்பு!

ஆழ்கடலில் உயிரைக் காத்த Apple Watch Ultra: மும்பை டெக்கின் த்ரில் அனுபவம்!

கரூர் சம்பவம்: மு.க.ஸ்டாலினிடம் கேள்விகள் எழுப்பி அனுராக் தாக்கூர் கடிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments