Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்யும் அதிரடி மசோதா: எதிர்க்க தயாராகும் திமுக

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (07:00 IST)
1955 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசு திருத்தம் கொண்டு வந்து கடந்த மக்களவை கூட்டத் தொடரின் போது நிறைவேற்றியது. ஆனால் இந்த சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால், அது காலாவதியானது. 
 
இந்த நிலையில், இன்று குடியு​ரிமை திருத்த மசோதா 2019 ஐ, மக்களவையில் உள்துறை  அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்யவுள்ளார். இந்த கூட்டத் தொடரிலேயே இதனை நிறைவேற்றிவிட வேண்டும் என பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதால் வரும் 12 ஆம் தேதி வரை பாஜக  எம்.பி.க்கள், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தவறாமல் பங்கெடுக்க கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
இதனிடையே, இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படுவதை அடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தனது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த மசோதாவை முற்றிலும் எதிர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும் இந்த மசோதாவை திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகளும் கடுமையாக எதிர்க்க திட்டமிட்டுள்ளன. இருப்பினும் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுகு பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் ஏசி மின்சார ரயில்.. ஐ.சி.எஃப் அதிகாரிகள் தகவல்..!

அமெரிக்கர்களை திருமணம் செய்தால் குடியுரிமை: ஜோ பைடனின் திட்டம் ரத்து..!

முதல்வருக்கு வாங்கிய சமோசா மாயம்.. சிஐடி விசாரணை.. கேலி செய்யும் எதிர்க்கட்சிகள்..!

பெண்கள் புர்கா அணிய தடை.. மீறினால் ரூ.10,000 அபராதம்: சுவிஸ் அரசு உத்தரவு..!

முதல்வருடன் விமானத்தில் செல்ல மறுத்தாரா? ஆளுனரின் மதுரை பயணம் திடீர் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments