Publish Date: Thu, 20 May 2021 (11:29 IST)
Updated Date: Thu, 20 May 2021 (12:55 IST)
கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது.
முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,76,070 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,57,72,400 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு...
வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும், எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
வெளிகாற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.