இண்டிகோ விமான நிறுவனத்தின் தொடர்ச்சியான விமான ரத்து காரணமாக, கர்நாடகாவின் ஹுப்பள்ளியை சேர்ந்த புதுமண தம்பதி மேதா க்ஷிர்சாகர் மற்றும் சங்கம தாஸ் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை.
நவம்பர் 23 அன்று புவனேஸ்வரில் திருமணம் முடித்த இந்த தம்பதி, டிசம்பர் 3 அன்று ஹுப்பள்ளியில் நடக்கும் வரவேற்புக்காக விமானம் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், நாடு முழுவதும் ஏற்பட்ட பைலட் பற்றாக்குறை மற்றும் செயல்பாட்டு குழப்பங்களால் இவர்களின் விமானம் ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிகழ்வை ரத்து செய்ய முடியாமல், மணமகளின் பெற்றோர் தம்பதிக்கான இருக்கைகளில் அமர்ந்து சடங்குகளை நிறைவேற்றினர்.
புவனேஸ்வரில் திருமண உடையில் இருந்த மணமக்கள், காணொளி காட்சி மூலம் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.