Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 5 வருஷத்துக்கு பெட்ரோல் விலை இப்படிதான்..! – அதிர்ச்சியளித்த நிதியமைச்சர்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (09:42 IST)
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சில ஆண்டுகள் இவ்வாறு நீடிக்கும் என்ற ரீதியில் நிதியமைச்சர் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்து வந்தது. 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்த நிலையில் கடந்த மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்து வந்தது. தேர்தல் முடிந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்குள் 9 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் என மக்கள் கவலையில் உள்ள நிலையில் விலை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments