Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்ற நிதிஸ்குமார் அரசு!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (18:08 IST)
பீகாரில் நிதிஸ்குமார் தலைமையிலான அரசு 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்ததால்,  நம்பிக்கை மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது..

பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த அரசின் மீதான நம்பிக்கை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.  பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் நிதிஸ்குமாருக்கு  160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்ததால்,  நம்பிக்கை மீதான வாக்கெடுப்பில் அவர் அரசு வெற்றி பெற்றுள்ளது.

இன்று சபா நாயகர் பாஜகவின் விஜயகுமார் சின் ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மகேஷ்வர் ஹ்சாரி 164 எம்.எல்.ஏக்களின் ஓட்டெடுப்பில்  புதிய  சபா நாயகராக  தேர்வானார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது: ஈபிஎஸ்

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை.. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா?

தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments