Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது குழந்தைக்கு ஓட்டுரிமை இல்லை: பாபா ராம்தேவ் சர்ச்சைக்குரிய பேச்சு!

Webdunia
திங்கள், 27 மே 2019 (11:13 IST)
இந்தியாவில் எந்த மதத்தினர்களாக இருந்தாலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அதையும் மீறி மூன்றாவது குழந்தை பெற்றால் அந்த குழந்தைக்கு ஓட்டுரிமை அளிக்க கூடாது என்றும் பாபா ராம்தேவ் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பிரதமர் மோடியின் கடந்த ஐந்து ஆண்டுகளில் சாமியார்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த நிலையில் அந்த பேச்சு மீண்டும் தொடர்கிறது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ், 'அடுத்த 50 வருடங்களில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக மாறுவதை  தடுக்க வேண்டும் என்றும், மக்கள் தொகை அதிகரிப்பால் அரசு அளிக்கும் சலுகைகளை முழுமையாக மக்களுக்கு கிடைக்காமல் இருப்பதாகவும், மக்கள் தொகையை தடுக்க  மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு ஓட்டுரிமை இல்லை என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், இவ்வாறு சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே மக்கள் மூன்றாவது குழந்தைகளை பெற்றெடுக்கமாட்டார்கள் என்றும் இது அனைத்து மதத்தினர்களுக்குமான பொதுவான வேண்டுகோள் என்றும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்
 
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே அதிக குழந்தைகளை பெற்றெடுத்து வரும் நிலையில் அந்த மதத்தினர்களுக்கு எதிராகவே பாபா ராம்தேவ் பேசியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments