Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டு விவகாரம் : வங்கி வாசலில் நிர்வாண போராட்டம் நடத்திய முதியவர் (வீடியோ)

ரூபாய் நோட்டு விவகாரம் : வங்கி வாசலில் நிர்வாண போராட்டம் நடத்திய முதியவர் (வீடியோ)

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (16:01 IST)
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு முதியவர், வங்கியின் முன்பு நிர்வாண போராட்டம் நடத்திய விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து, புதிய நோட்டுகளை பெற, இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். 
 
இந்நிலையில், டெல்லியில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முதியவர் ஒருவர், கையில் தேசியக் கொடியுடன், ஒரு வங்கியின் முன்பு நிர்வாணமாக படுத்து போராட்டம் நடத்தினார்.
 
இதைக்கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின், வங்கி காவலர்கள் மற்றும் போலீசார் அவரை சமாதனப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 
 
ஏற்கனவே, டெல்லியில் திருநங்கை ஒருவர், நீண்ட வரிசையில் நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மேலாடையை கழற்றி வீசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரிவிதிப்பால் ஏற்பட்ட இழப்பு: 200 பில்லியன் செட்டில்மெண்ட் கேட்கும் நிறுவனங்கள்! - பதுங்கிய ட்ரம்ப்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நியாயம் கேட்ட முதியவருக்கு அடி, உதை! - அன்புமணி கண்டனம்!

ஒரு ரூபாய்க்கு ஒரு சிம்கார்டு.. பி.எஸ்.என்.எல். வழங்கிய அதிரடி அறிவிப்பு..!

அதிமுகவை விமர்சிக்க வேண்டாம்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த தீர்ப்பு: பள்ளிக்கல்வி துறை இன்று ஆலோசனை

அடுத்த கட்டுரையில்