இந்தியா முழுவதும் மொத்த ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,050 ஆக உயர்ந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஒமிக்ரான் வைரஸ் நூற்றுக்கணக்கில் தினமும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம், ஒமிக்ரான் தொற்று 10, 050 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியா முழுவதும் மொத்த ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,050 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் தொற்று 3.69 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.