Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டே நாட்களில் ஒருலட்சம் பேர் பாதிப்பு: இந்தியாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (08:50 IST)
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, விரைவில் இரண்டாவது இடத்திற்கு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு இந்தியாவில் கடந்த சில தினங்களில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வருகிறது 
 
குறிப்பாக இந்தியாவில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50,525 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 23 ஆம் தேதி 12 லட்சமாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை 24ஆம் தேதி அன்று 13 லட்சமாக உயர்ந்துள்ளது. அதன்பின்னர் இரண்டே நாட்களில் 13 லட்சத்தில் இருந்து தற்போது 14 லட்சத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகிறது. இம்மாநிலத்தில் மட்டும் 3.57 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் நேற்று 5,199 பேர்களுக்கும் தமிழகத்தில் 6986 பேர்களுக்கும்,  கேரளாவில் 927 பேர்களுக்கும், தெலுங்கானாவில் 1500க்கும் மேற்பட்டோர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments