Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவை போல் சிறப்பு அந்தஸ்து கேட்டு ஒடிசா போர்கொடி!

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (15:56 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி பாஜகவுடனான கூட்டணியை ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் முறித்துக்கொண்டது. 
 
தெலங்கானா தனி மாநிலமாக பிறிக்கப்பட்ட போது ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், இதனை மத்தொய அரசு கண்டுக்கொள்ளவில்லை. இந்த காரணத்தால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மோடி ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். 
 
ஆந்திராவின் நிலைக்கே இன்னும் முடிவு வராத நிலையில், தற்போது அடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
 
இந்த கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, இந்தியாவில் மிகவும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. இங்குள்ள மக்கள்தொகையில், எஸ்சி, எஸ்டி சமூகத்தினரே பெரும்பான்மையாக உள்ளனர். 
 
மேலும், இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் மாநிலமாகவும் ஒடிசா உள்ளது. மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட ஒடிசாவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments