Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித் ஷாவை நேரில் சந்தித்த ஓ. பன்னீர் செல்வம் ! அரசியலில் பரபரப்பு

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (14:16 IST)
சமீபத்தில் மக்களவைத் தேர்தலில் 350 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்பட பல முக்கிய கட்சிகள் இருந்தபோதும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று படு தோல்வியடைந்தது.தற்போது பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் மட்டும் அதிமுக எம்பியாக மக்களவையில் உள்ளார்.
இந்நிலையில் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் என்று உறிதியளிக்கப்பட்டது.   இந்நிலையில் வரும் வேலூர் தேர்தலுகு அதிமுக (ஏசி சண்முகம் ) - திமுக ( கதிர் ஆனந்த் ) - நாம் தமிழர் - சுயேட்சைகள் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. அதனால் தமிழக அரசியல் களம் மற்றும் வேலூர் தொகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
 
இப்படியிருக்க  சமீபத்தில் சட்டசபையில் பேசியஓ. பன்னீர் செல்வம் 2011ஆம் ஆண்டுமுதல் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அதிமுகவுக்கு திருஷ்டி கழிப்பதற்காகத்தான் மக்களவைத் தேர்தலில் அதிமுகவை மக்கள் தோல்வியடையச் செய்தார்கள் என்று கூறினார்.
 
இந்நிலையில் இன்று டெல்லி சென்ற தமிழக துணைமுதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments