நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் 3 நாட்களிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்பிக்களின் அமளிதுமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக பாராளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்பிகளும் அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் பணிகள் பாதிக்கப்பட்டு கோஷம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக நாடாளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்பிகளும், அதானி குழும விவகாரம் குறித்து குழு அமைக்க வேண்டும் என எதிர்கட்சி எம்பிகளும், போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.