நேற்று மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்தம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக 288 எம்பிக்களும், எதிராக 232 எம்பிகளும் வாக்களித்துள்ளனர்.
மக்களவையில் நேற்று வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான விவாதம் சுமார் 10 மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, இந்த விவாதத்தில் திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் எம்பிக்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக, திமுக இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தது என்பதும், இந்த மசோதாவுக்கு எதிராக ஆ. ராசா எம்பி கடுமையாக பேசினார் என்றும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, நள்ளிரவில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், 288 எம்பிக்கள் ஆதரவாகவும், 232 எம்பிக்கள் எதிராகவும் வாக்களித்ததைத் தொடர்ந்து, மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.