Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சாய்ரா வசீமிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது....

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (11:44 IST)
விமானத்தில் நடிகை சாய்ரா வசீமிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.


 
பிரபல பாலிவுட் நடிகையும், அமீர்கான் நடித்த 'டங்கல்' படத்தில் அவருடைய மகள் கேரக்டரில் நடித்தவருமான சைரா வாசிம், சமீபத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கண்ணீருடன் ஒரு வீடியோவை பதிவு செய்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.
 
சமீபத்தில் தான் டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றதாகவும், அப்போது தனக்கு பின்னால் அமர்திருந்த நடுத்தர வயது சக பயணி ஒருவர் தனது காலால் தனது பின்புறத்தை சீண்டியதாகவும் அந்த வீடியோவில் கண்ணீருடன் கூறினார்.
 
மேலும் இதை மற்ற சக பயணிகளோ அல்லது விமான ஊழியர்களோ தட்டி கேட்கவில்லை என்றும், இதுதான் நீங்கள் பெண்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பா? என்றும் இது தனக்கு ஏற்பட்ட மிக மோசமான அனுபவம் என்றும் அதில் கூறியிருந்தார்.
 
சைரா வாசிமின் இந்த பதிவுக்கு பதில் கூறியுள்ள விஸ்தாரா ஏர்லைன்ஸ் இதுகுறித்து உடனடியாக விசாரணை செய்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக டுவிட்டரில் பதிவு செய்தது.
 
விசாரணையில், மும்பையை சேர்ந்த விகாஸ் என்ற இளம் தொழிலதிபர்தான் சாய்ராவிற்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை மும்பை போலீசார் கைது செய்தனர். சாயிரா 18 வயது பூர்த்தியாகதவர் என்பதால், விகாஷ் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் பயணம் செய்ய விகாஷுக்கு தடை விதிக்கப்படும் என அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்