Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் டீசலுக்கும் ஜிஎஸ்டி தயார்: நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பு

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (04:06 IST)
கடந்த ஜூலை முதல் தங்கம் உள்பட அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த நிலையில் பெட்ரோல், டீசல் உள்பட ஒருசில பொருட்களுக்கு மட்டும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பெட்ரோல், டீசலுக்கும் ஜிஎஸ்டி விதிக்க தயார் நிலையில் மத்திய அரசு இருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார்

இதுகுறித்து நேற்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ஜெட்லி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும் போதிலும், நமது நாட்டில், அதன் விலை அதிகமாக இருப்பது வருத்தமாக இருப்பதாகவும், இதனை தவிர்க்க பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வருவதற்கு தயாராகவே இருப்பதாகவும் கூறினார்.

இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்ய போவதாகவும், ஆலோசனைக்கு பின்னர் பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்த ஒருமித்த கருத்து மேற்கொள்ளப்படும் என்றும் அருண்ஜெட்லி கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments