Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது எப்படி சாத்தியம்? ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம் கிளப்பும் சஞ்சய் ராவத்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (11:34 IST)
குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து. 

 
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியத்தில் அதில் பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர்களது உடல் டெல்லியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து, சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, சமீப காலங்களில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதில் பிபின் ராவத் முக்கிய பங்காற்றியிருக்கிறார். 
எனவே இப்படி ஒரு விபத்து நடந்திருப்பது, மக்களிடையே பல்வேறு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. மேலும் ஜெனரல் பிபின் பயணித்த ஹெலிகாப்டர் மிகவும் நவீன ரகமானது, அதில் இரட்டை இஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்ததை கருத்தில் கொள்ள வேண்டும்.
 
பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்தியுள்ளதாக பிரகடனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து எப்படி சாத்தியம்? இந்த விபத்தால் முழு நாடும், தலைமையும் குழப்பமடைந்திருக்கலாம், பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பிரதமரோ அனைத்து சந்தேகங்களையும் நீக்க வேண்டும் என கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

GATE 2025 தேர்வு எப்போது? முழு அட்டவணை இதோ..!

மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்.. புரோக்கராக மாறிய 2வது கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி

தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.. அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments