Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா இடமாற்றம்: மோடி அதிரடி

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (19:38 IST)
சிபிஐ அமைப்பில் அதிகாரப் போட்டி இருந்ததை அடுத்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவும், துணை இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனாவும் கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவை அடுத்து நேற்று மீண்டும் சிபிஐ இயக்குனர் பதவியில் அலோக் வர்மா  அமர்த்தப்பட்டார்.

இந்த நிலையில் சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்க பிரதமர் மோடி முடிவு செய்ததாகவும், இதற்காக நியமனக்குழு சற்றுமுன் கூடியாதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதனையடுத்து சற்றுமுன் வெளியான தகவலின்படி சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதாக பிரதமர் தலைமயைிலான உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மீண்டும் சிபிஐ இயக்குனர் பதவியை அலோக் வர்மா இழக்கின்றார்.

முன்னதாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, மல்லிகார்ஜுனா கார்கே, நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments